மேலும் அறிய
Advertisement
விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன் - தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி
நேற்று மாலையே தூத்துக்குடி வந்துதங்கிவிட்டு இங்கு உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டேன்; சூழ்நிலை காரணமாக வரமுடியாத நிலையில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன்
முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் வீடுகள் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து தனது மகன் விவேக் உடன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்த எஸ்.பி.வேலுமணி, அவர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. காவல்துறையினரும் உளவுப்பிரிவு போலீசாரும் அவர் எங்கு சென்றார் என தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மீண்டும் அவர் சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் மாலை 4 மணிக்கு சென்னை செல்லக்கூடிய விமானத்தில் போடப்பட்டிருந்தது.
பிற்பகல் 3.30 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்த எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி,
நேற்று மாலையே தூத்துக்குடி வந்துதங்கிவிட்டு இங்கு உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டிருந்தேன் நேற்று சூழ்நிலை காரணமாக வரமுடியாத நிலையில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். அதிமுக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தலைவர்களின் அனுமதியைப் பெற்று விரைவில் விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவேன் என தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று அனுமதி இல்லாத நிலையில் எந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. இது குறித்து மேலும் விசாரித்த போது இன்று காலை தூத்துக்குடியில் இருந்து குற்றாலம் வந்த வேலுமணி, அங்கு ஒருவரை சந்தித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தர்மபுரம் ஆதீனமடத்தில் சத்ரு சம்ஹார பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பூஜையானது எதிரிகளை அழிக்கும் பூஜையாகவும் கருதப்படுகிறது. முருகன் சூரம்ஹாரம் செய்த கோலத்தை சத்ரு சம்ஹார பூஜை என்றழைப்பது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion