”நமக்கு நடக்குற வரைக்கும் செய்திதான்.. பாதிப்பு தெரியாது..” - நடிகை சஞ்சிதா ஷெட்டி
கண்டிப்பா வேக்சின் எடுத்ததுக்கு காரணம் கோவிட் கொடுமைகளாலதான். நமக்கு நடக்குற வரைக்கும் எதுவுமே பாதிப்பு தெரியாது. இன்னுமே பலரும் மாஸ்க் போடமா சுத்திக்கிட்டு இருக்காங்க.
கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிவரும் வேளையில் இதற்கு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அரசாங்கம் அறிவுறுத்தலின் பேரில் நிறைய மக்கள் கோவிட் வேக்சின் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் 'சூது கவ்வும்' 'பீட்சா' ' ரம்' உள்ளிட்ட படங்களின் ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
என்னை சுத்தி நிறைய டாக்டர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லார்கிட்டயும் கேட்டுதான் கோவிட் வேக்சின் எடுத்துக்கிட்டேன். ப்ரெண்ட்ஸ் டாக்டர்ஸ் எல்லாருமே என்னை ரொம்ப தூண்டுனாங்க. இதனாலதான் வேக்சின் எடுத்துக்கிட்டேன். பதினெட்டு வயசுக்கு மேல இருக்குறவங்க வேக்சின் எடுத்துக்கலாம்னு அரசாங்கமும் சொல்லியிருக்கு. இப்போ நான் எடுத்தது மட்டுமில்லாம வீட்டுல இருக்குறவங்களையும் வேக்சின் எடுக்க சொல்லிட்டு இருக்கேன். கண்டிப்பா வேக்சின் எடுத்ததுக்கு காரணம் பலரும் கொரோனாவால வர்ற அச்சம்தான். நமக்கு நடக்குறவரைக்கும் எதுவுமே பாதிப்பு தெரியாது. இன்னுமே பலரும் மாஸ்க் போடமா சுத்திக்கிட்டு இருக்காங்க. இவங்களால மத்தவங்க பலரும் பாதிக்கப்படுறாங்க. இப்போதைக்கு நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் வேக்சின் மட்டும்தான்.
இன்னைக்கு நான் வேக்சின் போட்டதுக்கு தெரிஞ்சுக்கிட்டு என்னை சுத்தி இருக்குற நிறைய ஃப்ரெண்ட்ஸ் அண்ட் பேமிலி போடுறதுக்கு என்னோட செயல் காரணமாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன். இதனால கோவிட் வேக்சின் எடுத்தா நம்மளநாமே பாதுகாத்துக்கலாம்னு சொல்றேன். சென்னை அப்போலோ கேன்சர் மருத்துவமனையில எடுத்துக்கிட்டேன். எப்போதுமே எந்த வேக்சின் எடுத்துக்கிட்டேன்னு ப்ரோமோட் பண்ண விரும்பமாட்டேன். ஏன்னா, மக்கள் அப்புறம் குறிப்பிட்ட வேக்சின் மட்டும் வேணும்னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க. இதனால, இதை சொல்ல விரும்பல. வேக்சின் எடுத்ததுக்கு அப்புறம் என் உடல்நிலை நார்மலா நல்லாயிருக்கு. சரியான நேரத்துக்கு சாப்பிடுறேன். அஞ்சு நாள் வரைக்கும் உடற்பயிற்சி எதுவும் செய்யல. இதனால எல்லாரும் வேக்சின் எடுத்துக்குறது நல்லது. இந்த லாக்டவுன் காலத்துல வாழ்றதே ரொம்ப போராட்டமா இருக்கு. எல்லாரும் வீட்டுல இருக்குறது அவசியம். நான் நிறைய புத்தகம் படிச்சிட்டு டைம்பாஸ் பண்ணிட்டு இருக்கேன். என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் தினமும் ஃபோன்ல பேசுறேன். ஷூட்டிங் ஸ்பாட்டா ரொம்பவே மிஸ் பண்றேன். தவிர, ஆன்மீகம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. எல்லா சீக்கிரம் சரியாகும்னு நம்புறேன்'' என்றார் சஞ்சிதா ஷெட்டி.