மேலும் அறிய

சொத்து வாங்குறீங்களா ? ஆன்லைனில் பட்டா , சிட்டா , வரைபடம் சரிபார்ப்பது எப்படி ?

வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்கள் வாங்கும் சொத்தின் விவரங்களை வீட்டில் இருந்தபடியே சரிபார்க்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ

பட்டா பெயர் மாறுதல் - மக்கள் முயற்சி செய்வதில்லை

இன்றைய சூழலில் எப்படியாவது தங்கள் பெயரில் வீடு, அல்லது மனையை வாங்கி விட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். இதை நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைத்து பணத்தை சேமிக்கின்றனர்.

கடுமையாக பாடுபட்டு சேர்க்கும் பணத்தை பயன்படுத்தி சொத்து வாங்கும் போது, அதில் தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய விஷயங்களையும் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரு சொத்தை தேர்வு செய்து வாங்குவதற்கான பத்திரப் பதிவு செய்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

பத்திரப் பதிவுக்கு அப்பால் அந்த சொத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்துவதில்லை. சில ஆண்டுகள் முன்பு வரை பட்டா தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு இல்லாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் பட்டா பெயர் மாற்றத்துக்கு மக்கள் தொடர் முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஆன்லைனில் பட்டா எப்படி பார்ப்பது ?

கடந்த 2000 - ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படும் பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கிடைக்கின்றன. ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் , அதன் உரிமையாளர் காட்டும் பட்டா உண்மையா என்பதை மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் சரி பார்க்கலாம்.

வருவாய் துறையின் https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்துக்கு சென்று பட்டா விபரங்களை பார்க்கலாம். இந்த இணைய தளத்தில் சென்று, பட்டா, சிட்டா, புலப்பட விபரங்கள் பார்க்க என்ற தலைப்புக்குள் செல்ல வேண்டும். இதில் , சொத்து அமைந்துள்ள பகுதி ஊரகம், நகர்ப்புற என்பதில் சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.

அங்கு நீங்கள் வாங்கும் சொத்து அமைந்துள்ள மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகிய விபரங்களை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் ஊரகம், நத்தம் என்பதில் ஒன்றை தேர்வு செய்து, சர்வே எண், பட்டா எண் ஆகியவற்றில் உரிய தகவல்களை பதிவிட வேண்டும்.

இதையடுத்து, உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு சில நிமிடங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ரகசிய குறியீடு எண் வடிவில் வரும். அதை கணினியில் செலுத்தினால் , உறுதிப்படுத்த கேட்கும். இதுற்கு நீங்கள் ஒப்புதல் அளித்தால் அடுத்த சில நிமிடங்களில் பட்டா விபரங்கள் கணினி திரையில் காட்சிப்படுத்தப்படும்.

இதனுடன் நில அளவை வரைபடமும் இணைக்கப்பட்டு இருக்கும். இதை கணினியில் பதிவிறக்கம் செய்து , தேவையான பிரதிகள் எடுத்து பயன்படுத்தலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள். கடந்த , 2000 - ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படும் பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கிடைக்கின்றன பொது மக்கள் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget