மலை தேனீ கொட்டி விவசாயி உயிரிழப்பு: போலீசார் விசாரணை - கரூரில் சோகம்
கரூர் நொய்யல் கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கவுண்டன் புதூர் அருகே மலை தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
இந்நிலையில் மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் ராமசாமி தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பறந்து சுற்றி திரிந்த மலை தேனீக்கள் ராமசாமியை தீண்டியது. இதில் வலி தாங்க முடியாமல் ராமசாமி அருகில் இருந்த கிணற்று தண்ணீருக்குள் குதித்துள்ளார். பின்னர் நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து விட்டு மூச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் கிணற்றுக்கு மேலே வந்தபோது அங்கு சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலை தேனீக்கள் ராமசாமியை சுற்றி தீண்டியுள்ளது. இதில் ராமசாமி மயக்கம் அடைந்துள்ளார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராமசாமியை வேலாயுதம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்வ நகர் பகுதியில் தென்னை மரத்தில் கூடு கட்டி உள்ள ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் மலைதேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் - பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணல் மேட்டை அடுத்த சடையப்ப கவுண்டன்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த மாருதி ஜென் கார் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் இரு சக்கர வாகனங்களில் பயணதித்த 3 பேர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் சிதறி விழுந்தனர். அதி வேகமாக இரு சக்கர வாகங்களில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பதைபதைப்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial