Helpline Numbers: மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!
சென்னை காவல் துறை தரப்பில் மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
![Helpline Numbers: மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..! Helpline numbers have been announced by the police regarding Migjam storm damage Helpline Numbers: மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/0ceba5b8c3645df6e046b1832d7953b21701843879321589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக காவல்துறை தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை வெள்ளக் கட்டுப்பாட்டு அறை - 044 23452437 தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 - 23452359, 044 - 23452361, 044 - 23452377 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நேற்று முந்தினம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை, கடலோர காவல்படி, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Continuing with HADR in cyclone affected areas, 04 hepters of Air Force Station Tambaram carried out air drops covering 16 locations of north & south Chennai. So far, close to 950kgs of relief supplies have been distributed by IAF. pic.twitter.com/4JeFTmBE9A
— TRACOMIAF_CMCC (@tracomiaf) December 6, 2023
இது ஒரு பக்கமிருக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டௌ வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்தது. குறிப்பாக மழை வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேங்கல், கழிவுநீர், மரம் விழுவது உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணை அழைத்து, தங்களின் பிரச்சினைகளைக் கூறலாம். 044- 25619204, 044- 25619206, 044- 25619207 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு, தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம். அதேபோல, 9445477205 என்ற எண்ணை வாட்ஸப் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு பின்வரும் சென்னை பெருநகர கவல் உதவி மைய எண்களை அறிவித்துள்ளது. 044 - 23452359, 044 - 23452360, 044 23452361, 044 - 23452377 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் GCP வெள்ளக் கட்டுப்பாட்டறை எண். 044 - 23452437 அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)