Hanuman Jayanti: ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடைமாலையில் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்! பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
நாமக்கல் மாவட்ட ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடையில் மாலை சாத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடியது ஆஞ்சநேயர் கோவில். கோவிலில் நடைபெறும் வழிபாடுகளுக்கு மிகவும் பிரசித்து பெற்றது. மேலும், இந்த கோவிலி உள்ள ஆஞ்சநேயர் சிலையானது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. மேலும், இதன் உயரம் 18 அடி என்பதுதான் கூடுதல் சிறப்பான விஷயம். வழிபாடுகளில் மிகச் சிறப்பு வழிபாடு என்றால் அது ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா. ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இந்த ஆண்டில் இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 23, 2022) கொண்டாடப்படுகிறது.
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிப்பட்டுச்செல்லும் இந்த கோயிலில் இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. இந்த கண்கொள்ளாக்காட்சியை அங்கு வழிப்பாட்டிற்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
இதனைதொடர்ந்து 1,00,008 வடை மாலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருவதை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 11 மணி வரை இந்த கோலத்தில் ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதன் பின்னர் அந்த மாலை எடுக்கப்பட்டு, அதன் பின்னர் 1008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், நல்லெண்ணைய், சீயக்காய்தூள் மற்றும் பஞ்சாமிரதம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெறவுள்ளது.