மேலும் அறிய

Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?

Gudalur Man Eater Tiger : கூடலூரில் அடுத்தடுத்து மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். இந்த நிலையில் அந்த புலி எப்படி பிடிக்கப்பட்டது .?என்பதை வனத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.

மனிதர்களை வேட்டையாடிய புலி

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான புலிகள் உள்ளது. அவ்வப்போது புலிகள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை அடித்து சாப்பிட்டு வந்த நிலையில், திடீரென புலியின் பார்வை மனிதர்கள் மீது திரும்பியது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி  லாரஸ்டன் எஸ்டேட் 4-வது டிவிஷன் பகுதியில் வசித்து வந்த எம். பாலகிருஷ்ணன் (58) என்ற தொழிலாளியை புலி அடித்துக் கொன்றது. அடுத்தாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி  அதே பகுதியில் வசித்து வந்த கே. ரவிகுமார் என்ற மற்றொரு தொழிலாளரை அவரது வீட்டிற்கு அருகே வெறும் 200 மீட்டர் தொலைவில் புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவே அச்சப்பட்டனர். மனிதர்களை தாக்கி கொல்லும் ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

புலியை சுட்டுப்பிடிக்க களம் இறங்கிய வனத்துறை

அந்த வகையில் ஆட்கொல்லி புலியை உயிருடனோ அல்லது சுட்டு பிடிக்க களத்தில் இறங்கியது வனத்துறை, 100க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் காடு முழுவதும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். மலைப்பகுதியில் உள்ள புதர்களிலும் தேடும் பணியை முடக்கிவிட்டனர். மேலும் புலியை கவரும் வகையில் ஆடு, மாட்டை தூண்டிலாக பயன்படுத்தினர். அந்த வகையில் நேற்று முன் தினம் உணவை சாப்பிட வந்த ஆட்கொல்லி புலியானது சிக்கியது. இதனையடுத்து புலியை பிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன.? என வனத்துறை 
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலியைப் பிடிப்பதற்கான உரிய உத்தரவுகள் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு, 21-08-2026 அன்று புலியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 

வனத்துறையின் மாஸ்டர் பிளான்

அதன் அடிப்படையில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை மருத்துவர்கள். விரைவு மீட்புக் குழு கொண்ட 105 வனப் பணியாளர்கள் இப்பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக் கண்காணிப்பாளர்களும் (Tiger Trackers), வன கால்நடை மருத்துவர்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.சந்தேகிக்கப்படும் புலியைப் பிடிப்பதற்காக 305 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் (thermal drones) இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு. சந்தேகிக்கப்படும் புலியின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கூண்டில் சிக்கிய புலி

குறிப்பாக வனத்துறை அமைச்சர் அவர்கள் 11.09.2026 அன்று நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இப்பணியானது முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் 28 நாட்களாக எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில், புலியைப் பிடிப்பதற்காக கூடலூர் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் (18.09.2026) அன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் புலியானது சிக்கியது.

வண்டலூர் பூங்காவில் ஆட்கொல்லி புலி

புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பிடிப்பட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருப்பதாலும் அதன் சிங்கபற்கள் தேய்மானம் அடைந்திருப்பதாலும் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
“எங்க வீட்டு கழிவுநீர் வரத்தான் செய்யும்”.. தட்டிக்கேட்ட பெண்ணின் கையை வெட்டிய கொடூரம்
“எங்க வீட்டு கழிவுநீர் வரத்தான் செய்யும்”.. தட்டிக்கேட்ட பெண்ணின் கையை வெட்டிய கொடூரம்
தீபாவளி முடிந்து சிவகங்கை திரும்புகிறீர்களா? உஷார்! தீவிர வாகன சோதனை!
தீபாவளி முடிந்து சிவகங்கை திரும்புகிறீர்களா? உஷார்! தீவிர வாகன சோதனை!
செக் புக் செல்லாது என்ற போலி செய்தி! ஆர்பிஐயின் திட்டவட்ட மறுப்பு!
செக் புக் செல்லாது என்ற போலி செய்தி! ஆர்பிஐயின் திட்டவட்ட மறுப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget