GST E Way Billing : தமிழக அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி, இணைய வழி பில்லிங் பயிற்சி.. 3 நாட்களுக்கு இலவச பயிற்சி முகாம்..
ஜிஎஸ்டி வரி, இ வே பில்லிங் 3 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
![GST E Way Billing : தமிழக அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி, இணைய வழி பில்லிங் பயிற்சி.. 3 நாட்களுக்கு இலவச பயிற்சி முகாம்.. GST, E Way Billing online training programme GST E Way Billing : தமிழக அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி, இணைய வழி பில்லிங் பயிற்சி.. 3 நாட்களுக்கு இலவச பயிற்சி முகாம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/d024a2a832398feb8dfc25810ce520c11682787272411109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜிஎஸ்டி வரி, இ வே பில்லிங் 3 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு " குறித்த இணையவழி பயிற்சி (3 நாட்கள்) பயிற்சியினை வரும் 03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு"" & அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
முன்பதிவு அவசியம்: என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)