பகவத் கீதைக்கு இணையாக எந்த புத்தகத்தையும் கூற முடியாது - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு
ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னரும், அவர்களின் கல்வி முறை இந்தியாவில் தொடர்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னரும், அவர்களின் கல்வி முறை இந்தியாவில் தொடர்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார். “சுவாமி விவேகானந்தரின் கனவை நோக்கி இந்தியா நகர வேண்டும். ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னரும், அவர்களின் கல்வி முறை இந்தியாவில் தொடர்கிறது. என்னைப்பொருத்தவரை பகவத் கீதைக்கு இணையாக எந்த புத்தகமும் கிடையாது” என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, சனிக்கிழமை மற்றொரு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, இளைஞர்கள் பெரிய கனவு காணவும், கடினமாக உழைக்கவும், பின்னடைவுகளால் பயப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். ஏனெனில் நாட்டின் எதிர்காலம் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றியில் அடங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் ரவி மாணவர்களுடன் கலந்துரையாடும் அமர்வின் போது, இளைஞர்கள் பெரிய கனவு காணவும், கடினமாக உழைக்கவும், பின்னடைவுகளால் பயப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். ஏனெனில் நாட்டின் எதிர்காலம் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றியில் அடங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார். pic.twitter.com/L9jWqAFOzC
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 28, 2023