G-20: சென்னையில் இந்த பகுதிகளிலெல்லாம் ட்ரோன்கள் பறக்கத்தடை - என்ன காரணம் தெரியுமா?
ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்படுகிறது என சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்படுகிறது என சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அதாவது வரும் புதன்கிழமை வரை நடைபெறவுள்ள ஜி20 நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில் கிண்டி, கிராண்ட் சோலா மற்றும் மாகாபாலிபுரம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
The flying of drones has been banned in Chennai due to the G-20 Working Group Meeting on Disaster Risk Reduction which will be held in ITC Grand Chola, Guindy and Sheraton Grand (Mahabalipuram) from 23-7-2023 to 26-7-2023.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 22, 2023
#SafeChennai #InPublicServices #GCPForYou #NeverOffDuty pic.twitter.com/VVKUft2BmQ