மேலும் அறிய

Minister Jayakumar: பேரறிஞர் அண்ணா பற்றி தவறாக பேசியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஜெயக்குமார்

பேரறிஞர் அண்ணா பற்றி தவறாக பேசியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுகல் சீனிவாசன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், " தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர செய்து இயல் இசை நாடக தமிழில் பன்மொழி தன்மை பெற்றவர், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சரளமாக பேசுபவர். தமிழன் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர்.

உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவரை பொதுச்செயலாளர் சந்தித்து பேசினார். தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். 

அமலாக்கத்துறை சோதனை தகவல் அடிப்படையில் செய்கிறார்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள். பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர். ”அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார்? எங்கு படித்தார்? ஏதோ இவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல, நடக்காத விஷயத்தை சொல்லக்கூடாது. அதிமுக இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. 

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது. அண்ணா பற்றி பேசியதற்கு அதிமுக கண்டன்ம் தெரிவிக்கிறோம், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்.மீண்டும் பேசினால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும். 

100% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக சொல்வது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய். மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளது. கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10 % தான் செய்தார்கள். தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாராங்கல்லையே சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget