Smoke Biscuit: எச்சரிக்கை விடுத்த மோகன் ஜி.. உடனடியாக ஆக்ஷன் எடுத்த தமிழ்நாடு அரசு.. என்ன நடந்தது?
திரவ நைட்ரஜனை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களின் இயக்குநரான மோகன் ஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்த மோகன் ஜி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற தின்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu pic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 21, 2024
மோகன் ஜி பதிவிட்ட அந்த வீடியோ, கர்நாடகாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட் சாப்பிடும் சிறுவன் வலியால் அலறி துடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி ஸ்மோக்கிங் பிஸ்கட் விற்கப்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், “நைட்ரஜன் ஐஸ் உணவு பொருளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் நைட்ரஜன் ஐஸ் உணவு பொருள் அல்ல எனவும், அதை உட்கொண்டால் மிக ஆபத்தான நிலைக்கு எடுத்து செல்லும். உயிரிழப்புகள் கூட நிகழலாம். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவு பொருட்களையும் வழங்க கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் எலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.10 லட்சம் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.