சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது கரிசல் குயில் கி.ராவின் புகழுடல்

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் புதுவையில் அரசு மரியாதை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US: 

தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளார். 99 வயதான அவர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது மறைவு இலக்கியவாதிகளுக்கும், வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது கரிசல் குயில் கி.ராவின் புகழுடல்

இந்த நிலையில், புதுவை லாஸ்பேட்டையில் வசித்து வந்த அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது உடல் புதுச்சேரியில் இருந்து அவரது சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. இடைச்செவல் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செய்யப்படும் என்றும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil Writer ki.ra sahitya acadamy award deadbody

தொடர்புடைய செய்திகள்

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது