மேலும் அறிய
தமிழ்நாட்டில் 15 நாட்களுக்கு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை – உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறையையொட்டி மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறையையொட்டி மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோடை விடுமுறையையொட்டி மே 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கும் 15 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞ்சர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















