Thirumahan Everaa Death : ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம்... முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(Thirumagan Evera) நேற்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா பதவி வகித்து வந்தார். அவரின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி
இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈ.வெ.ரா. திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து காரில் ஈரோடு சென்றார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, முத்துசாமி, ஆர்.காந்தி, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ஈரோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வெ.ரா. திருமகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது தந்தையான ஈவிகேஸ் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இவரை தொடர்ந்து, அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள். இந்நிலையில், ஈ.வெ.ரா. திருமகன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின், வரும் முதல் பிறந்தநாளில் கனிமொழி முன்னணித் தலைவர்களிடம், வாழ்த்து பெற திட்டமிட்டிருந்த நிலையில், கனிமொழி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு காலையில் முதல் நிகழ்ச்சியாக துக்க நிகழ்வுக்குச் சென்று, திருமகனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
கனிமொழி, பொதுவாகவே கட்சி, இயக்கம், கொள்கை போன்ற விழுமியங்களுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர், தனது சொந்த பணிகளைக் காட்டிகளிலும் கட்சி நடவடிக்கை மற்றும் கொள்கைப்பணிக்காக தொடர்ந்து மக்கள் மன்றம், நாடாளுமன்றத்திலும் பேசியும், எழுதியும், மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வை நாடவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Pongal Special Buses: பொங்கல் பண்டிகை: காலியாகும் டிக்கெட்டுகள்; அரசு பேருந்துகளில் விறுவிறு முன்பதிவு! இதுவரை எவ்வளவு பேர் தெரியுமா?
தமிழ்நாட்டில் இத்தனை வாக்காளர்களா..? இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! முழு விபரம்