மேலும் அறிய

EPS vs OPS: அலுவலக சாவி விவகாரம் : ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு தாக்கல்..

EPS vs OPS: அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒபிஎஸ் அதிமுக அலுவலகத்தை உரிமைகோர முடியாது என இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

EPS vs OPS: அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒபிஎஸ் அதிமுக அலுவலகத்தை உரிமைகோர முடியாது என இபிஎஸ் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ள ஓபிஎஸ்யிடம் சாவியை ஒப்படைக்க கூடாது எனவும்  இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. 

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே  மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் தீர்மானமும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டது. பல்வேறு வழக்குகளுக்கு பிறகு அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில்,

  • ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது
  • இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது தற்போது சாத்தியமில்லாதது . இந்த உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும்
  • ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், ஜூன் 23-ந் தேதிக்கு முந்தையை நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.
  • அ.தி.,மு.க. பொதுக்குழுவிற்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை
  • ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என ஓ.பி.எஸ். தரப்பு கூறுவதை ஏற்க முடியாது
  • பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுத்தார்
  • 2 பேரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட இயலாத நிலையில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது
  • ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என்ற தீ்ரமானம் செல்லும் 
  • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானம் செல்லும் என, குறிப்பிடப்பட்டிருதது. 

இதனை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர், உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே இந்த மனுமீதான விசாரணையில் எங்களைக் கேட்காமல், தீர்ப்பு வழங்கக் கூடாது என, இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது, கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத ஒருவர், கட்சி அலுவலகத்தையும், அலுவலக சாவியை உரிமை கோர முடியாது என இபிஎஸ் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், ஒபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது, மேலும், கட்சியில் அவர் இருந்தபோது, கட்சி அலுவலகத்தினை சூறையாடி இருக்கிறார். பண விவகாரங்களில் கையாடல் செய்துள்ளார். இப்படியான ஒருவரிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க கூடாது, மேலும், ஒபிஎஸ்ஸின் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நள் பல திருப்பங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
Embed widget