CM Stalin On Neet: ஒட்டுமொத்த இந்தியாவுமே நீட் தேர்வை எதிர்க்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin On Neet: பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாரா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
CM Stalin On Neet: ஒட்டுமொத்த இந்தியாவுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை முதல்வன் திட்டம் விரிவாக்கம்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழகத்தின் வழியில் ஒட்டுமொத்த இந்தியாவுமே செல்கிறது. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழகம் நிட் தேர்வை எதிர்த்தபோது, முதலில் கேள்வி எழுப்பியவர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாரா? மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் ஆக்கப்பூர்வமான செயலை செய்ய ஒன்றிய அரசு தயாரா?” என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.