மேலும் அறிய

புதுச்சேரியில் மின் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுச்சேரியில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது

புதுச்சேரியில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் மக்களின் மீது சுமத்தி வருகின்றன. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு சுமையை புதுச்சேரி மக்களுக்கு அறிவித்திருக்கிறது. புதுச்சேரியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடையே கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது.

அப்போது மின்சார கொள்முதல் விலையை ஈடு செய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின்சார கொள்முதலை ஈடுகட்டும் விதமாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் உத்தேச மின்கட்டணம் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஒழுங்கு முறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.இதேபோல நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணம் கடந்த ஏப்ரலில் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுச்சேரி அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 2023-24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இழப்பை சரிசெய்ய மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் மின் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

அதன்படி... வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 66 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசா உயர்த்தப்படுகிறது. தெருவிளக்கு யூனிட்டிற்கு 78 பைசா, சிறு தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 70 பைசா, எல்.டி. தண்ணீர் தொட்டிக்கு யூனிட்டிற்கு 72 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டிற்கு 25 பைசா, 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 75 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 60 பைசா, உயர்அழுத்த வர்த்தக நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டிற்கு 59 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மின்கட்டண உயர்வை உடனே குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget