![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
EPS BIRTHDAY: 70 வகை சீர்! 70 கிலோ கேக்! சேலத்தில் களைகட்டிய இ.பி.எஸ். பிறந்தநாள் கொண்டாட்டம்!
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக மாட்டுவண்டி மற்றும் டிராக்டர்கள் மூலமாக 70 வேளாண் விளைப் பொருட்களை சீர்வரிசைகளாக எடுத்து வந்து பரிசாக வழங்கினர்.
![EPS BIRTHDAY: 70 வகை சீர்! 70 கிலோ கேக்! சேலத்தில் களைகட்டிய இ.பி.எஸ். பிறந்தநாள் கொண்டாட்டம்! Edappadi Palaniswami's 70th Birthday admk cadres 70th Kilo Cake Cutting Celebration EPS BIRTHDAY: 70 வகை சீர்! 70 கிலோ கேக்! சேலத்தில் களைகட்டிய இ.பி.எஸ். பிறந்தநாள் கொண்டாட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/199bd859dfdb6bf62bbebc0d95a207d01715517730484113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். குறிப்பாக 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டாட்டம்:
இதனிடையே சேலம் அதிமுக புறநகர் மாவட்டம் சார்பாக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் 70 கிலோ எடை கொண்ட முந்திரிப் பருப்பை மாலையாக தயார் செய்து வித்தியாசமான மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
2,500 பேருக்கு பிரியாணி:
தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சேலம் நெடுஞ்சாலை நகர் முழுவதும் கூட்ட நெருசலில் சிக்கித் தவித்தது. இது மட்டுமில்லாமல் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் நீர் மோர், கம்மங் கூழ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இதனுடைய 2500 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பிரியாணி வாங்க தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முந்தி கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரை சேர்ந்த குமரன் என்பவர் ஒரு லட்சத்திற்கு மேலான லட்டுக்களை வழங்கினார். கோவில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவதால் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே சிறிய கடைகள் மற்றும் வாகனநெரிசல் என காட்சியளித்தது.
இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக மாநில தகவல் தொழில்நுட்ப அணியில் செயலாளர் ராஜசக்தியின் தலைமையில் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர்கள் மூலமாக விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த கரும்பு, வாழை, நுங்கு, இளநீர், தர்பூசணி, மாம்பழம், திராட்சை, தேங்காய் உள்ளிட்ட 70 வேளாண் விளைப் பொருட்களை சீர்வரிசைகளாக எடுத்து வந்து எடப்பாடி பழனிசாமி இடம் வழங்கினர். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)