Edappadi Palanisamy | சசிகலா இணைப்பு? பரபரக்கும் அதிமுக! அவசர ஆலோசனையில் ஈபிஎஸ்!
Edappadi Palanisamy is engaged in emergency consultation
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலால் திமுக குஷியில் உள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான அதிமுக பலமாக அடிவாங்கியுள்ளது. மாநகராட்சிகளில் திமுக 43.59 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. அதிமுக 24 சதவிகித வாக்குகளை பெற்றது. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக 41.91%, அதிமுக 25.56% வாக்குகளை பெற்றது. இந்த வாக்கு சதவீதம் அதிமுகவின் பலவீனத்தை காட்டியது. பல முக்கிய அதிமுக தலைவர்களின் இடங்களிலேயே அதிமுக அடிவாங்கியது.
இது அக்கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் வரும் 5ம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலையே இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பு உண்டாக்கியது.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இந்நிலையில் சேலத்தில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சேலத்தின் அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. சசிகலா இணைப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.