மேலும் அறிய

101 ஜோடி.. இயலாதவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் மணம் முடித்து அழகு பார்த்த டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம்

மாமல்லபுரத்தில் டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளி  மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 101 ஜோடிகளுக்கு ரூ.1 கோடி செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளி  மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 101 ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது. 

டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு வெட்டிங் வோவ் வி கனெக்ட் 2023  நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் 3 ஆம் நாளான நேற்று மிகப் பிரமாண்டமாக இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பசுமை  தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, டபிள்யூ. வி.கனெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தட்சிணாமூர்த்தி, இயக்குனர் நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

இதில், 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  அதேசமயம் இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது. மேலும், 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, 1 மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. 

பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தகுதியுடைய 101 ஜோடி மணமக்களை ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து மிக கவனமாக தேர்ந்தெடுத்ததாகவும் டபிள்யூ.வி. கனெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget