மேலும் அறிய

E-Cigarette: தடைக்குப் பிறகும் தலைவிரித்தாடும் இ- சிகரெட்: போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க அன்புமணி வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட பிறகும் இ -சிகரெட்டுகள் தலை விரித்தாடுவதாகவும் போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

தடை செய்யப்பட்ட பிறகும் இ -சிகரெட்டுகள் தலை விரித்தாடுவதாகவும் போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

’’புகையிலை சிகரெட்டுகளை விட மிகக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகின்றன. இ-சிகரெட்டுகளின் தீமைகள் பற்றி அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வரும் பெரும் கவலையைத் தருகிறது.

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்காக கருவிகள்  என்ற பெயரில்தான் இ-சிகரெட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆயின. புகைப்பழக்கத்தை கைவிட முடியாதவர்கள், அதற்கு மாற்றாக இ-சிகரெட்டுகளை பிடிக்கலாம்; அதனால் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அவ்வாறு செய்தால் காலப்போக்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விடலாம் என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், புகைப்பழக்கத்திற்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இ-சிகரெட்டுகளே இப்போது இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன.

சட்டவிரோத சந்தைகளில் இ -சிகரெட்டுகள்

இ-சிகரெட்டுகளை பற்ற வைக்கத் தேவையில்லை. சிகரெட் போன்ற வடிவத்தில் இருக்கும் அவற்றை வாயில் வைத்து இழுத்தாலே அதில் உள்ள வேதிப்பொருட்கள் பேட்டரி மூலம் ஆவியாக்கப்பட்டு புகை வெளியாகும். இ-சிகரெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் மனிதர்களை மயக்கக்கூடிய பல வகையான சுவையும், மணமும் கொண்டவை. அதனால் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையான இளைஞர்கள் - மாணவர்களால் அவற்றிலிருந்து மீண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் இ-சிகரெட்டுகள் பல்வேறு பெயர்களில் சட்டவிரோத சந்தைகளில் கிடைக்கின்றன. 100 முறை இழுக்கக்கூடியவற்றில் தொடங்கி 5000 முறை இழுக்கக்கூடியவை வரை என பல அளவுகளில் இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன.

E-cigarettes: What YOU Must Know About! - Tata 1mg Capsules

புகையிலையை மூலப்பொருளாகக் கொண்ட சிகரெட்களுடன் ஒப்பிடும்போது, சில இ-சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு குறைவு என்பதைத் தவிர, இ-சிகரெட்டுகளில் எந்த நன்மையும் இல்லை. ஆனால், தீமைகள் ஏராளமாக உள்ளன. இ-சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், இழுக்கும் அளவு ஆகியவற்றைப் பொருத்து அதன் நிகோட்டின் அளவு மாறுபடும். பல இ-சிகரெட்டுகளில் புகையிலை சிகரெட்டுகளை விட அதிக நிகோட்டின் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

புற்றுநோய், இதய நோய் ஆபத்து

இ- சிகரெட்டுகளில் பிரோப்பிலின் கிளைகோல் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவை மனிதர்களுக்கு பல வகையான புற்றுநோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பலர் இதன் தீமைகளை உணர்ந்தும், சிலர் உணராமலும் இ-சிகரெட்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடும்.

இ-சிகரெட்டுகளின் தீமைகளை உணர்ந்த மத்திய அரசு அதை பயன்படுத்த வேண்டாம் என்று 2018-ஆம் ஆண்டில் அறிவித்தது. 2019-ஆம் ஆண்டில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. ஆனால், அதற்கு பல மாதங்கள் முன்பாகவே தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இ-சிகரெட்டுகள் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானது.

தமிழ்நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் தடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை மிகவும் ஆபத்தான இ- சிகரெட்டுகளின் பிடியிலிருந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget