மேலும் அறிய

ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை; புதிய சட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 26 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை நடந்துள்ளது எனவும் உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதவித்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது., 

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கும் கூடுதலாக பணத்தை இழந்த மகேந்திரன், அதை அடைக்க முடியாமல் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு பிறகு பாலக்குட்டு என்ற மலை உச்சியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எத்தகைய துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்பதற்கு மகேந்திரனின் நிலை தான் எடுத்துக்காட்டு ஆகும்.

மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை.

இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
Today weather: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே அலர்ட்.. இன்றைய வானிலை அறிக்கை இதோ!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே அலர்ட்.. இன்றைய வானிலை அறிக்கை இதோ!
Raja Kannappan: அசால்ட்டா இருந்துட்டோம்.. தவெக வந்துட்டு.. இனி நாங்க தான்.. ராஜகண்ணப்பன் சவால்!
Raja Kannappan: அசால்ட்டா இருந்துட்டோம்.. தவெக வந்துட்டு.. இனி நாங்க தான்.. ராஜகண்ணப்பன் சவால்!
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Embed widget