மேலும் அறிய

நலத்திட்ட சர்வே நடத்த அதிகாரம் உள்ளபோது, சாதிவாரி சர்வே நடத்த அரசுக்கு ஏன் தயக்கம்?" – அன்புமணி இராமதாஸ் காட்டம்!

நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான் !

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்துவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என்றும் சமூகநீதிக்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்யக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான், இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது.

தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.

இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி சர்வேயையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.

சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி சர்வே நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது க்ண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
மக்கள் வரிப்பணம் வீண்? சென்னை வெள்ளத் தடுப்பு அறிக்கை வெளியிடு: அன்புமணி ராமதாஸ்
மக்கள் வரிப்பணம் வீண்? சென்னை வெள்ளத் தடுப்பு அறிக்கை வெளியிடு: அன்புமணி ராமதாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
Embed widget