மேலும் அறிய

மத்திய பட்ஜெட்டிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்சி நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்:

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு என்ற வார்ததையே பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மையை கண்டித்து வரும் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கனிமொழி தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் என எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தமிதமீ

மாற்றாந்தாய் மனப்பான்மை:

மத்திய அரசு பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதைக் கண்டிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, டெல்லியில் இன்று நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுக்குவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை பயன்படுத்தாததற்கு தமிழ்நாட்டின் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

பீகார் மற்றும் ஆந்திரா மாநில ஆளுங்கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு அந்த மாநிலங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட் என்று இந்தியா கூட்டணியினர் விமர்சித்தனர். மேலும், இதை கண்டித்து கடந்த 24ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்புVCK ADMK Alliance : அதிமுகவை அழைத்த திருமா!உதயநிதி பதிலடி!நீடிக்குமா கூட்டணி?Rahul Gandhi Speech in USA : மோடி, RSS -ஐ ரவுண்டு கட்டிய ராகுல் காந்தி!ஆர்ப்பரித்த அமெரிக்கர்கள்Karur Bakery Fight : கரூரில் கந்தலான பேக்கரி..போதையில் வெறிச்செயல்..இளைஞர்கள் அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு - கட்டி தந்தது யார் தெரியுமா..?
ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு - கட்டி தந்தது யார் தெரியுமா..?
Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு
Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு
Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ
Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ
75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
“தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
Embed widget