Watch video: இதுதான் தமிழ்நாடு..! ஈஸ்டருக்கு மெழுகுவர்த்தி ஏந்திய இந்து முதியவர்! நெகிழ்ச்சி வீடியோ!!
இதுதான் தமிழ்நாடு, இதுதான் இந்துமதம், இதுதான் திராவிட மாடல் அயராது உழைக்கும் ஒற்றுமை என்றும் ராஜா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகைக்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் இருந்து மெழுகுவர்த்தியை ஏந்தியுள்ளார். இந்த வீடியோவை திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழவதும் இன்று ஈஸ்டர் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு தேவாலயத்திற்கு சென்றனர். தற்போது, நமது நாட்டில் மதம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் மதத்தை வைத்து ஏதோ ஒரு கலவரம், வன்முறை சமீபகாலமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற பிரச்னை வந்தாலும், அதை தலைதூக்கவிடாமல் நமது காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்து மதத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, பக்கத்தில் இருக்கும் தேவாலயத்தை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்திவரும் கிறிஸ்துவர்களுடன் சேர்ந்து தானும் மெழுகுவர்த்தி ஏந்தினார். தனது பேத்தியிடம் நியூம் பிடிச்சிக்கிறீயா என தாத்தா கேட்டது அழகாக இருந்தது.
மேலும், இதுதான் தமிழ்நாடு, இதுதான் இந்துமதம், இதுதான் திராவிட மாடல் அயராது உழைக்கும் ஒற்றுமை என்றும் ராஜா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ
BIGGGGGG HUGGGGGG to this thatha😘❤️The way he says"neeyum pidichikriya" to the little one & the way the grandaughter enjoyed this whole thing💙
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 17, 2022
THIS IS #TamilNadu
THIS IS my #Hinduism
THIS is the Unity the #DravidianModel works tirelessly for ❤️🌄🙏🏾#ஒன்றே_குலம்_ஒருவனே_தேவன் 🙏🏾 pic.twitter.com/zlUbsbGe3G
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்