மேலும் அறிய

குமரியால் மீண்டும் தொல்லை...! - தலைமை அறிவித்த வேட்பாளர்களை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்...! பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக

’’குழித்துறை நகராட்சியை பாஜக கவுன்சிலர்கள் ஆதரவுடன் கைப்பற்றிய திமுக, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டு வென்றுள்ளனர்’’

நெல்லை எனது எல்லை, குமரி எனக்கு தொல்லை என நகைச்சுவையாக கூறுவார் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி, அந்த அளவுக்கு கன்னியாகுமரியில் நிலவும் அரசியல் சூழல் தமிழகத்தின் பிற மாவட்டங்களை காட்டிலும் மாறுபட்ட ஒன்று. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை நகராட்சி சேர்மன் வேட்பாளராக பெர்லின் ஷீபாவை அறிவித்திருந்தது கட்சி தலைமை. இந்த நிலையில் குழித்துறை நகர தி.மு.க செயலாளர் பொன் ஆசைத்தம்பி அவரை எதிர்த்து போட்டியிட்டார்.

முதலில் நடைபெற்ற சேர்மன் மறைமுக தேர்தலில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளர் பெர்லின் ஷீபா, தி.மு.க போட்டி வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி, காங்கிரஸ் சார்பில் பிரபின் ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். அதில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளர் பெர்லின் ஷீபா 9 ஓட்டுகளும், தி.மு.க அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட திமுக கவுன்சிலர் பொன் ஆசைத்தம்பி 10 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளரான பிரபின் ராஜா 2 ஓட்டுகளும் பெற்றனர். யாருக்கும் 11 வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தேர்தல் நடந்தது.

குமரியால் மீண்டும் தொல்லை...! - தலைமை அறிவித்த வேட்பாளர்களை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்...! பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக
அதில் தி.மு.க வேட்பாளர் பெர்லின் ஷீபா, தி.மு.க போட்டி வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பொன் ஆசைத்தம்பி 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பெர்லின் ஷீபா 9 ஓட்டுகள் பெற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளைரை வீழ்த்தி, தி.மு.க போட்டி வேட்பாளரான பொன் ஆசைத்தம்பி வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரியால் மீண்டும் தொல்லை...! - தலைமை அறிவித்த வேட்பாளர்களை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்...! பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக
அதுபோல குளச்சல் நகராட்சியில் தி.மு.க தலைமை ஜான்சன் சார்லஸ் என்பவரை நகர்மன்ற வேட்பாளராக அறிவித்தது. ஆனால்  திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கவுன்சிலர் நசீர் வெற்றி பெற்றுள்ளார். குளச்சலில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் நசீர் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா 12 ஓட்டுகள் பெற்றனர். இதையடுத்து நடந்த குலுக்கலில் நசீர் வெற்றிபெற்றார். குளச்சல் மற்றும் குழித்துறை நகராட்சியில் தி.மு.க போட்டி வேட்பாளர்கள் பா.ஜ.க ஆதரவுடன் சேர்மன் பதவியை கைப்பற்றியுள்ளனர். குழித்துறை நகராட்சி சேர்மனாக வெற்றிபெற்றுள்ள பொன் ஆசைத்தம்பி மற்றும் குளச்சல் சேர்மன் பதவியை கைப்பற்றிய நசீர் ஆகியோர் இதற்கு முன்பு நகராட்சி சேர்மன் பதவியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரியால் மீண்டும் தொல்லை...! - தலைமை அறிவித்த வேட்பாளர்களை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்...! பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக
கொல்லங்கோடு நகராட்சியில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனர். இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு கொல்லங்கோடு நகராட்சி ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க போட்டியாக களம் இறங்கியது. சி.பி.எம் வேட்பாளராக லலிதா, தி.மு.க சார்பில் ராணி, பா.ஜ.க சார்பில் சுதா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சி.பி.எம் லலிதா 10 ஓட்டுகளும், தி.மு.க ராணி 18 ஓட்டுகளும், பா.ஜ.க சுதா 5 ஓட்டுகளும் பெற்றார். இதில் தி.மு.க வேட்பாளர் ராணி வெற்றிபெற்றார்.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget