மேலும் அறிய

"இங்கு வந்தால் கொன்றுவிடுவேன்!" என மிரட்டுகிறார்கள் திமுகவினர் : மருது பட நடிகை புகார் !

தன்னுடைய வீட்டிற்கு வந்து திமுக பிரமுகர்கள் சிலர் மிரட்டுவதாக நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'ஒரு குப்பை கதை', அப்பா, மருது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆதிரா பாண்டிய லட்சுமி. இவர் சென்னையிலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய வீட்டின் அருகே திமுக பிரமுகர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 7ஆம் தேதி இவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பின்பும் இவர்கள் வீட்டிற்கு அருகே வந்து பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆதிரா பாண்டிய லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,"என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது" எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு உடன் சேர்த்து காவல்துறையில் புகார் அளித்தது தொடர்பான சிஎஸ் ஆர் நகலையும் பதிவிட்டுள்ளார். 

மேலும் மற்றொரு ட்விட்டரில் பதிவில்,"நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை" எனப் பதிவிட்டு அவர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் உடன் பதிவிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் ஒரு சில இடங்களில் திமுக பிரமுகர்கள் சிலர் இது போன்று பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நபர்கள் மீது திமுக தலைமையும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் ஏற்கெனவே அம்மா உணவகம் ஒன்றை சேதப்படுத்திய இரண்டு பிரமுகர்களை திமுக தலைமை உடனடியாக கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. திமுகவின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றனர். 

தற்போது மீண்டும் சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திமுக அரசு உடனடியாக சட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. ”ஒரு பக்கம் திமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில் மற்றொரு புறம் இதுபோன்ற சில பிரமுகரின் செயல் ஆட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் உள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க திமுக கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: Tamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..!

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் மரிய வில்சன்
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் மரிய வில்சன்
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?

Embed widget