மேலும் அறிய

DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

DMK: புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வந்தபோது கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே பேசிய டீட்டா சரவணன் கைது.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக  தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்  விசாரணை நடத்திய பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், திமுக. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பி.டி.அரசகுமார். அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 

அன்பில் மகேஷ் கைது

இதனையடுத்து இந்த வழக்கு ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்பில் மகேஷிக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை  நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அன்றைய தினமே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

சமூக வலைதளங்களில் வைரலானது

இதனிடையே புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வந்தபோது போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டனர். அப்போது வேலுார் மாநகராட்சி கவுன்சிலரும், மகேஷ் ஆதரவாளருமான டீட்டா சரவணன், 'கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே' என, அவரிடம் ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. 

டீட்டா சரவணன் கைது

இதுதொடர்பாக புகாரில், சென்னை புழல் போலீசார்  டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூரு செல்வது போல் போக்குகாட்டிவிட்டு விழுப்புரத்தில் பதுங்கியிருந்த  டீட்டா சரவணனை போலீசார் கைது செய்தனர். இவர் வேலுார் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவிலிருந்து தாவி தவெகவிற்கு வந்த கவுன்சிலர் ரஜினி.. கட்சியில் இணைந்த 3 மாதத்தில் அதிரடி நீக்கம்!
திமுகவிலிருந்து தாவி தவெகவிற்கு வந்த கவுன்சிலர் ரஜினி.. கட்சியில் இணைந்த 3 மாதத்தில் அதிரடி நீக்கம்!
'வெற்றிப் பயண'த்தால் ரூ.25 கோடி தினசரி இழப்பு: போக்குவரத்து மானியத்தை உடனே வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
'வெற்றிப் பயண'த்தால் ரூ.25 கோடி தினசரி இழப்பு: போக்குவரத்து மானியத்தை உடனே வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
காதலியை அரிவாளால் வெட்டி விட்டு லாரி முன் பாய்ந்த காதலன்... அறையில் நடந்தது என்ன ?
காதலியை அரிவாளால் வெட்டி விட்டு லாரி முன் பாய்ந்த காதலன்... அறையில் நடந்தது என்ன ?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Traffic e-Challan: ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
Embed widget