ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்..! என்ன செய்யப்போகுது திமுக..?
விசிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
விசிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்கள். அதனடிப்படையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளவுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர்,கேபினண்ட் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அரசு உயர் அதிகாரிகளுக்கும் ஆளுநர் மாளிகையில், தேநீர் விருந்து ஆளுநர் சார்பாக அளிக்கப்படும்
கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் தற்போது பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுஜ்றைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால், இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடக்கவுள்ள தேநீர் விருந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. அதேபோல், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவையும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், திமுக தனது நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
இதுகுறித்து, வேலூர் ஆசிரியர் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி இதழின் மாவட்ட பொறுப்பாளர்களின் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,
"குடியரசு தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது. தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று முறையாக அழைப்பு விடுத்தார் ஆளுநர். ஆனால் அந்த விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க போவதில்லை. ஏன் என்றால், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ். தலைவராக செயல்படுகிறார் என்பதால் தேநீர் விருந்தை நிராகரிக்கிறோம் என்றார்.