டீசல் சிக்கனத்திற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்
டீசல் சிக்கனம் செய்வது குறித்தும் முன் உதாரணமாக ஆட்சித் தலைவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருப்பது மற்ற அதிகாரிகளை வியப்பிலும், பல்வேறு அரசு அதிகாரிகளையே பாராட்டையும் பெற்றுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது.
டீசல் சிக்கன நடவடிக்கைக்காக மனுநீதி முகாமிற்கு சென்ற கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அரசு பேருந்தில் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேக்கமலை, கோவில்பட்டி, இடையபட்டி கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததன் பேரில் இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அரசு அதிகாரிகளுடன் காலையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக காலையில் விவசாய பணிக்கு செல்வதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை, ஏற்பட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை எடுத்து, மனுநீதி முகாம் மாலை 4:00 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேலும் ஆட்சியருடன் அரசு அதிகாரிகள் மனுநீதி முகாமுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அரசு பேருந்தில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், அரசு அதிகாளுடன் அரசு பேருந்தில் ஏறி கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேக்கமலை, கோவில்பட்டி, இடையபட்டி கிழக்கு உள்ளிட்ட பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு மனுநீதி முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்தார். டீசல் சிக்கனம் செய்வது குறித்தும் முன் உதாரணமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருப்பது மற்ற அதிகாரிகளை வியப்பிலும், பல்வேறு அரசு அதிகாரிகளையே பாராட்டையும் பெற்றுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் பொறுப்பேற்ற நாட்கள் முதல் தற்போது வரை பல்வேறு அதிரடி மாற்றங்களை கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வரலாற்று முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடத்தினார். அதேபோல் கடவூர் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தற்போது டீசல் சிக்கன நடவடிக்கைக்காக பேருந்தில் பயணம் செய்திருப்பது பலரையும் ஆச்சிரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.