Seeman On Jaibhim Issue | தாமதமாக விளக்கம் அளித்தாலும், ஞானவேல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் - சீமான்
சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் ஜெய் பீம் படம் சமீபத்தில் வெளியானது. சமூகத்தில் அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகள் மீது பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஜெய் பீம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்றிருக்கிறது. அதேசமயம் அக்னி கலச சீனுக்காக பாமக அதனை எதிர்த்துவருகிறது. சூர்யா எங்கும் நடமாட முடியாது என பாமக மாவட்ட செயலாளர் கூறியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதத்துக்கு பாரதிராஜா பதில் அளித்திருந்தார். அதற்கு அன்புமணியும் காட்டமாக பதிலளித்திருந்தார். நிலைமை இப்படி இருக்க செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது... அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.
அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்.... அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்" என்றார்.
இச்சூழலில் ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இன்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2021
(1/3)
சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது. ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2021
(2/3)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:
News Wrap - Abpநாடு | இன்றைய (21.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு..#Headlines #NewsWrap #ABPNaduHeadlineshttps://t.co/GyxMzGgs6V
— ABP Nadu (@abpnadu) November 21, 2021