மேலும் அறிய

85 ஆண்டு கால கனவு நனவாகிறது! தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தில் முக்கிய திருப்பம்- அன்புமணி பெருமிதம்!

மொரப்பூர் - இராணிமூக்கனூர் ரயில் பாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டதில் மகிழ்ச்சி: தருமபுரி வரை பணிகளை நீட்டிக்க நிலம் எடுத்துத் தர வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

மொரப்பூர் - இராணிமூக்கனூர் ரயில் பாதை அமைக்க
டெண்டர் கோரப்பட்டதில் மகிழ்ச்சி: தருமபுரி வரை
பணிகளை நீட்டிக்க நிலம் எடுத்துத் தர வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தருமபுரி - மொரப்பூர் இடையே 38 கி.மீ நீளத்திற்கு புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மொரப்பூர் முதல் இராணி மூக்கனூர் வரை 10.221 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தொடர்வண்டித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 85 ஆண்டு கால கனவை நனவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திட்டம் ஆகும். 2014&ஆம் ஆண்டு தருமபுரி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட  நான்  நாடாளுமன்றத்திலும்,   அடுத்தடுத்து வந்த தொடர்வண்டித் துறை அமைச்சர்களிடமும் தொடர்ந்து பேசியதன் பயனாக 2016&17 ஆம் ஆண்டுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தை ரூ.358.95 கோடியில் செயல்படுத்தவும்  தொடர்வண்டித்துறை அமைச்சகம் 06.02.2019 அன்று ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து 04.03.2019&ஆம் நாள் எனது முன்னிலையில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின்7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், அதன் ஒரு பகுதிக்கு இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

மீதமுள்ள 28 கி.மீ தொலைவில் 8 கி.மீ நீள பாதையில்  சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.  இத்திட்டத்திற்கு  தேவையான  93.11 ஹெக்டேர் நிலங்களில்  46.79 நிலங்கள் கையகப்படுத்தித் தரபட்டுள்ளன. தனியார் பட்டா நிலங்களில் 26.19 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தான் அடுத்தக்கட்ட பணிகளை இன்னும் தொடங்க முடியாததற்கு காரணம் ஆகும்.

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் தலைநகரம் மாநிலத் தலைநகருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தருமபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வசதியாக அதற்கு தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இளைஞர் மீது கொலை முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இளைஞர் மீது கொலை முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
லண்டன் பெண் என பேஸ்புக்கில் அறிமுகம்... ரூ.12.59 லட்சம் அபேஸ்! புதுச்சேரியில் நைஜீரியர் கைது!
லண்டன் பெண் என பேஸ்புக்கில் அறிமுகம்... ரூ.12.59 லட்சம் அபேஸ்! புதுச்சேரியில் நைஜீரியர் கைது!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Embed widget