Dharmapuram Adheenam: உயிரே போனாலும் பரவாயில்லை.. நானே தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்.. கொந்தளித்த மதுரை ஆதீனம்..!
தருமபுர ஆதீன பல்லக்கை நானே சுமப்பேன் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தருமபுர ஆதீன பல்லக்கை நானே சுமப்பேன் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், “ அரசியல் வேறு ஆன்மீகம் வேறு. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்வதற்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. மதுரை ஆதீன பல்லக்கை தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் என்றும் உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.
பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் சொல்வேன். 500 ஆண்டாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்த கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை முதலமைச்சரே நேரில் வந்து நடத்த வேண்டும். முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை, எடுக்கக்கூடாது என சொல்லக்கூடாது அதுபோலத்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி " என்று அவர் பேசியுள்ளார்.
View this post on Instagram
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச் சென்று வீதியுலா செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என திராவிட கழகம் உட்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை உதவி ஆட்சியர் பாலாஜி விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார்.