மேலும் அறிய

Ajithkumar: "இணைந்து செயல்படுவோம்" அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து!

துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஒன்றிணைந்து செயல்படுவோம் என அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி.

கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் அஜித் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை, படப்பிடிப்பு என வலம் வந்தார். தற்போது மீண்டும் கார் ரேஸிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியையும் உருவாக்கியுள்ளார்.

கார் பந்தயத்தில் அஜித்:

இந்த நிலையில் துபாயில் நடைபெறவுள்ள GT3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2004ல் F3 சாம்பியன்ஷிப் மற்றும் 2010ல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித் கலந்து கொண்டார். 

அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து:

நடிகர் அஜித்துக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழக விளையாட்டுத்துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு விளையாட்டுத்துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திராவிட மாடல் அரசு:

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget