Thiruvannamalai : குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை : மக்களிடம் அதிகரித்துவரும் தடுப்பூசி ஆர்வம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை மற்றும் மரணங்கள் குறைந்து காணப்பட்டது. தடுப்பூசி மாவட்டம் முழுவதும் 6929 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் தளர்வுகள் உடன் இரண்டு வாரங்களுக்கு தமிழக முதல்வரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையான முறையில் கடைப்பிடித்தால் கொரோனா தொற்று மாவட்டத்தில் படிபடியாக குறைய தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 473. கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 பேர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை ஆரணி ,போளுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தும், நகர்ப்புறங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்தும் வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து 45 முதல் 60 வயதுவரை உள்ளவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்ட வர்கள் மேலும் 45-க்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரைஒரே நாளில் 6929 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று முகாமில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு முதலாம், இரண்டாம் டோஸ்களைச் செலுத்திக்கொண்டுள்ளனர்.