மேலும் அறிய

Mettur Dam: மீண்டும் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,694 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,537 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,355 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,694 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: மீண்டும் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,694 கன அடியாக குறைவு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 98.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 62.31 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மீண்டும் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,694 கன அடியாக குறைவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
Embed widget