CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்கியதற்கே தண்டனை அனுபவிக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக-வில் மிகப்பெரிய அளவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. திமுக தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பல குற்றச்சாட்டுக்களை இன்று அடுக்கினார். இதையடுத்து, தனக்கு எதிரான நிர்வாகிகளின் பதவிகளை பறிப்பதாக எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தோல்வியில் இருந்து வெற்றி பெற வேண்டும். அல்லது அந்த தோல்வியில் இருந்து கூடுதலாக இடங்கள் பெற வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் கடுமையாக கீழே சென்று கொண்டிருக்கிறோம். அதிமுக என்ன நாேக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதிமுக-வின் அடிப்படை கொள்கை தீய சக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
தோற்றதே இல்லையா?
33 ஆண்டுகாலம் ஆட்சியில் தொண்டர்கள் அமர வைத்துள்ளனர். அப்படிப்பட்ட இயக்கத்தை இந்த இயக்கத்தை எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நிறுவியவர் அம்மா ( ஜெயலலிதா). வெற்றி, தோல்வி என்பது சகஜம். அதை ஏற்கிறோம். தோல்வி பெறாதவர்களே இல்லை. இன்று ஏன் தோல்வி அடைந்துள்ளோம் என்று கேட்டால், இன்றைய பொதுச்செயலாளர் ஏன் 1996ல் தோற்கவில்லையா? 2006ல் தோற்கவில்லையா? என்று கேட்கிறார்.
தோற்றோம். ஆனால், தோற்ற இயக்கத்தை மீண்டும் ஆட்சியில் உட்கார வைக்கும் தகுதியும், திறமையும் அம்மாவிற்கு இருந்தது. இந்த இயக்கம் தொடங்கியது முதலே 1996ம் ஆண்டு வெறும் 4 உறுப்பினர்கள் மட்டுமே பெறறனர். அம்மா ( ஜெயலலிதா) தோற்றார். அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று இந்த இயக்கம் இருக்குமா? இருக்காதா? என்ற நிலை ஏற்பட்டபோது, ஒரு தலைவனுக்கு என்ன தகுதி? வெற்றியில் மட்டும் என்னால் பெற்றது என்று சொல்வதில் இல்லை. தோல்விக்கு நான்தான் காரணம் என்று ஏற்றுக்கொள்கிறேன் என்பவரே உண்மையான தலைவர்.
டெபாசிட் இழந்தோம்:
தொண்டர்களை காட்டிவிட்டு, நிர்வாகிகளை காட்டி தப்பித்துக்கொள்வர் தலைவர் அல்ல. வெற்றி பெற்றால் தன்னால் வெற்றி, தோல்வி அடைந்தால் நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை. ஆனால், அன்று அம்மா ( ஜெயலலிதா) இந்த தோல்விக்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன் என்று எம்ஜிஆர் ஆட்சியை நிறைவேற்றுவேன் என்று சபதம் எடுத்து, இரண்டே ஆண்டுகளில் இந்த இயக்கத்தை 1998 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக வெற்றி பெறவில்லை என்ற சாதனையை மீண்டும் அம்மா(ஜெயலலிதா) வெற்றி பெற்று ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைத்துவிட்டார். அதற்கு பின்பு இந்த இயக்கத்தின் நிலை என்ன? 18 தேர்தலில் 19 சதவீதம். 2021 தேர்தலில் 65 இடங்கள். 2024 தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தோம்.
பாஜக கூட்டணி:
அதிமுக வரலாற்றில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தோம். 3வது இடம் சென்றோம். அப்போதும் புரிந்து கொள்ளவில்லை. 2024 தேர்தலில் தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜக-வுடன் கூட்டணி வைப்போம் என்றோம். இனி எந்த காலத்திலும் பாஜக-வுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்றார். இது அனைவருக்கும் தெரியும். தேர்தல் முடிவு படுதோல்வி.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர். பாஜக கூட்டணி மோடி வேட்பாளர். அதிமுக-வில் எந்த பிரதம வேட்பாளரும் இல்லை. திமுக-விற்கும், இவருக்கும் போட்டி என்பது போல பரப்புரை செய்தார். தோல்வி அடைந்தோம். பாஜக-வுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்று சொன்ன பொதுச்செயலாளர் டெல்லிக்கு வருகிறார். வாங்க என்றார் அமித்ஷா வீட்டிற்கு போகிறோம் என்றார். பாஜக கூட்டணியை உறுதி செய்தார். யாரைக் கேட்டார்? ஒரு ஆலோசனை, ஒரு கருத்தையாவது கேட்டார்?
பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவு. செயற்குழு முடிவை யாரையும் ஆலோசிக்காமல் என்ன நோக்கத்திற்காக கூட்டணி என்று இன்று வரை சொல்லவில்லை. தேமுதிக-வி்ற்கு ராஜ்யசபா சீட் கொடு்ப்போம் என்றார். பின்னர் நிலையை மாற்றிக்கொண்டார். இது தப்பு, முறையில்லை. சொன்னதை கொடுங்கள் என்றோம். சட்டமன்ற தேர்தலுக்கு அவர்கள் தேவை என்றோம். கொடுத்த வாக்கையும் காப்பாற்றவில்லை.
ஒற்றைத் தலைமை:
அவர்களுக்கு எங்கள் மீது மிகுந்த வருத்தம். அவர்களின் முதல் தேர்வே அதிமுக-தான். ஆனால், அவர்களை உதாசீனம் செய்தார். எந்த கூட்டணியும் தேவையில்லை என்றார். நாங்கள் சொன்னதை அவர் கேட்கவில்லை. அதிமுக வரலாற்றில் தொடர் தோல்வி. அதிமுக சரித்திரத்தில் இன்று பெரும்பான்மையான தொகுதியில் 3வது இடம் அதிமுக சென்றுள்ளது. கீழே போய் கொண்டே இருக்கிறது. எங்களால் தாங்க முடியவில்லை.
அவரை பொதுச்செயலாளராக யார் கொண்டு வந்தோம்? அவரா ஆகிவிட்டாரா? பொதுக்குழு உறுப்பினர்கள் நாங்கள் கொண்டு வந்தோம். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம். அவருக்கு பயம். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், வேகமாக செயப்ட ஒற்றைத் தலைமை அவசியம் என்று நாங்கள் சொன்னோம். அந்த பாவத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். தண்டனையை அனுபவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம்:
சசிகலா சிறைக்குச் சென்றபிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி - எடப்பாடி பழனிசாமி அணி என்று பிரிந்து இருந்த போது சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டனர். 2021 சட்டமன்ற தேர்தல் தாேல்விக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். பின்னர், அவர் கட்சியில் இணைய முயற்சித்தும் அவரை அவர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. இறுதியில் அவர் திமுக-வில் சேர்ந்து விட்டார்
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















