மேலும் அறிய

மேட்டூர் அணை நிலவரம் : நீர்வரத்து, நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த முழு தகவல்

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 20,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 20,500 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 20,500 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணை நிலவரம் : நீர்வரத்து, நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த முழு தகவல்

அணையின் நீர் மட்டம் 120.10 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 22,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் நேற்று 200 கன அடியாக இருந்த நிலையில் இன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நிலவரம் : நீர்வரத்து, நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த முழு தகவல்

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14,486 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 14,276 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.96 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.49 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,635 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது . 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget