மேலும் அறிய

கடலூர் பள்ளி பேருந்து விபத்து: சோகத்தில் தமிழ்நாடு! அதிர்ச்சி தரும் காரணம்!

கடலூர் செம்மங்குப்பத்தில் மூடுந்து மீது தொடர்வண்டி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு - அன்புமணி இரங்கல்

கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் மூடுந்து மீது தொடர்வண்டி மோதிய விபத்தில் 2 பேர் இறப்பிற்குப் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என விழைகிறேன்.

விபத்துக்கான காரணம் குறித்து பல தகவல்கள் கூறப்படும் போதிலும் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடவுப்பாதை பணியாளர் உறங்கி விட்டதால் கதவை மூட மறந்தது தான் விபத்துக் காரணம் என்று ஒரு தரப்பிலும், கதவை மூட ப்ணியாளர் முயன்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர் தடையை மீறி மூடுந்தை ஓட்ட முயன்றது தான் விபத்துக்கு காரணம் என்று தொடர்வண்டித் துறை தரப்பிலும் கூறப்படுகிறது. 2 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆளில்லா கடவுப்பாதைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைப் போல, கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Cuddalore School Bus Accident:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தது மட்டுமின்றி எஞ்சிய மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

விபத்திற்கு காரணம் யார்?

இந்த விவகாரத்தில் ரயில்வே கேட்கீப்பர் தூங்கியதன் அலட்சியமாகவே இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி வேன் மீது மோதிய கடலூர் - மயிலாடுதுறை ரயில் தண்டவாளத்தில் வருவதை அறிந்த கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடியதாக கூறப்படுகிறது. 

ஓட்டுனர்தான் திறக்க சொன்னதா?

அப்போது, அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் வந்துள்ளது. அப்போது, பள்ளி வேனை ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுனர் கேட்கீப்பரிடம் ரயில்வே கேட்டை திறக்குமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்குச் செல்ல தாமதம் ஆகிவிட்டதாகவும், அதன் காரணமாக ரயில்வே கேட்டை திறக்குமாறும் வேன் ஓட்டுனர் கேட்கீப்பரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கேட்கீப்பர் ரயில்வே கேட்டை திறந்ததாகவும் அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த கடலூர் - மயிலாடுதுறை ரயில் பள்ளி வேன் மோதியதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

கேட்கீப்பருக்கு சரமாரி அடி:

அதேசமயம், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் விபத்திற்கு காரணமான மயிலாடுதுறை - கடலூர் ரயில் வந்து கொண்டிருந்த சமயத்தில் கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அவரின் அலட்சியத்தாலே பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக கூறப்படுகிறது. 

தொடர் விசாரணை:

இந்த விவகாரத்தில் எந்த தகவல் உண்மையானது என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த கோர விபத்து தொடர்பாக ரயில்வே போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியிலே கேட்கீப்பர் அலட்சியமா? அல்லது ஓட்டுனரின் அலட்சியமும் இதில் உள்ளதா? என்ற உண்மை தெரிய வரும். இந்த கோர விபத்தின் எதிரொலியாக கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Embed widget