சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,105 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம், சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,181 ஆக அதிகரித்தது
தமிழகத்தில் கொரோன நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,711 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 50%க்கும் அதிகமான பாதிப்புகள் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பதிவாவனை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,308 ஆக உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 17,098 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,105 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம், சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,181 ஆக அதிகரித்தது.
காய்ச்சல் முகாமைகள் மூலம் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், தகுதியுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை நிர்வகிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. சென்னையில் 1000க்கும் அதிகமான தெருக்களில் கொரோனா நோய்த் தொற்று பதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 500 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்குடி, தேனாம்பேட்டை, ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் விகிதாசார எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொடம்பாக்கம் மண்டலத்தில் 200க்கும் அதிகமான தெருக்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தேனாம்பேட்டையில் 140க்கும் அதிகமான தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், திரு. வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா நோய்த் தொற்று இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.