மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,153 கன அடியாக குறைவு.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 12,763 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,831 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 7,153 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,153 கன அடியாக குறைவு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 94.09 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 57.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,153 கன அடியாக குறைவு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி
ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE 3rd OCT 2024: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.. தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்..
Breaking News LIVE 3rd OCT 2024: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.. தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்..
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை தாக்கல் செய்வோம்-  காவல்துறை அதிரடி
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை- காவல்துறை அதிரடி
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி
ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE 3rd OCT 2024: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.. தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்..
Breaking News LIVE 3rd OCT 2024: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.. தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்..
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை தாக்கல் செய்வோம்-  காவல்துறை அதிரடி
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை- காவல்துறை அதிரடி
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு அறைகூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு அறைகூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
Embed widget