மேலும் அறிய

Income Tax ; பத்திரப் பதிவில் தவறான " பான் கார்டு " பதிவு !! நடைமுறை சிக்கல் என்ன ?

நிலம் வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களில், தவறான 'பான்' எண்ணை குறிப்பிடுவது, வருமான வரித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது

" பான் " எண் கட்டாயம்

தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் பத்திரத்தில் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக இருந்தது. தற்போது, இந்த விதிமுறை திருத்தப்பட்டதால், 20 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால் மட்டுமே, 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறான "பான்" எண்கள் கண்டுபிடிப்பு

20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளின் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் அது குறித்த விபரங்களை, சார் - பதிவாளர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதில் பத்திரத்தின் மதிப்பு, அதை வாங்கியவர், விற்றவர், அவர்களின், 'பான் எண்' போன்ற தகவல்கள், வருமான வரித்துறைக்கு அளிக்கப்படும்.

அந்த தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் வருமான வரி செலுத்தியது குறித்து, வருமான வரித்துறை ஆய்வு செய்யும். சமீபத்தில் வருமான வரித்துறை மேற்கொண்ட ஆய்வில், ஏராளமான நபர்கள், சொத்து பத்திரத்தில், தவறான 'பான்' எண்களை குறிப்பிட்டிருப்பது தெரிய வந்தது.

உதாரணமாக, புது டில்லியை ஒட்டி, ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் மட்டும், 2.5 லட்சம் சொத்து பரிமாற்றங்களில், தவறான 'பான்' எண் குறிப்பிட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில மாநிலங்களில், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பரிமாற்றங்களில், தவறான பான் எண் குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொத்து பத்திரங்களில், தவறான பான் எண் கொடுத்தவர்களுக்கு, சார் - பதிவாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிக்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

சொத்து பரிமாற்றத்தின் போது பத்திரத்தில் குறிப்பிடப்படும் ஆதார் எண்ணை சரி பார்க்க தற்போது வசதி உள்ளது. ஆனால், பான் எண்ணை சரி பார்ப்பதற்கான வசதி இல்லை. இதனால், யார் தவறான எண்ணை குறிப்பிடுகின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.

வருமான வரித்துறை கண்டுபிடித்து தெரிவித்தால் அதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிப்பதிலும் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவ்விஷயத்தில் தெளிவான வழிமுறைகள் இல்லாததால் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
சென்னையின் எல்லை 5 மடங்கு விரிவாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வரப்போகும் மாற்றம்!
சென்னையின் எல்லை 5 மடங்கு விரிவாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வரப்போகும் மாற்றம்!
"கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி" நோட்டமிட்ட கணவன் - இறுதியில் நடந்த கொடூரம்
தமிழகத்தில் இன்று புயல் மழை தாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை எப்போது பெய்யும்?
தமிழகத்தில் இன்று புயல் மழை தாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை எப்போது பெய்யும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Embed widget