மேலும் அறிய

Priyanka Gandhi: "பெரியாரின் அந்த கேள்வி இன்று வரை நீடிக்கிறது" - மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேச்சு

முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

Priyanka Gandhi: முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

பிரியங்கா காந்தி உருக்கம்:

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட மாநாட்டில்,  தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

பின்னர், இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ”32 ஆண்டுகளுக்கு முன்பு, எனது 19 வயதில் நான் தமிழகத்திற்கு என் தந்தையின் சிதறிய உடலை எடுத்துச் செல்ல வந்தேன். விமான நிலையத்தில்  கூட்டமாக வந்த பெண்கள் என்  தாயை கட்டித்தழுவி அழுதனர். அப்போது, என் மனதில் எழுந்த உண்ரவை சொல்ல இயலாது. நீங்கள் தான் என் தாய் , நீங்கள் தான் என் சகோதரி. இன்று உங்களுடன் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்திய நாட்டின் பெண்களை பற்றி பேச போகிறேன்" என்றார்.

”100 ஆண்டுகளுக்கு பிறகும் பெண் அடிமைத்தனம் உள்ளது"

தொடர்ந்து பேசிய அவர், "பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்.  100 ஆண்டுகளுக்கு முன்பே 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற கேள்வி எழுப்பியவர் பெரியார்.  அவர் கேள்வி எழுப்பி 100 ஆண்டுகளுக்கு பிறகும் பெண் அடிமைத்தனம் இன்னும் உள்ளது. பெண்கள் ஏன் அடிமையாகவே இருக்கிறார் என்ற பெரியாரின் கேள்வி தற்போது வரை நீடித்து வருகிறது.   

சமூகத்திற்கு அன்பையும், போராடும் குணத்தையும் கற்றுத் தந்தது பெண்களே. பெரியார் வழியில் அண்ணாவும், கலைஞரும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். சமூக மாற்றத்திற்கான புரட்சி தமிழநாட்டில் தான் உருவானது. சமூக மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கிறோம்.  முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும். இந்திய பெண்கள் நேரத்தை இனி வீணடிக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்” என்றார் பிரியங்கா காந்தி. 

மேலும் படிக்க

Kanimozhi MP: "யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம்" - மகளிர் உரிமை மாநாட்டில் கர்ஜித்த கனிமொழி

"வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது" - பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget