மேலும் அறிய

CM Stalin Slams BJP Govt.: “அவங்களுக்கு மக்கள் நல்லா இருந்தாலே பிடிக்காது“; மத்திய பாஜக அரசை போட்டுத் தாக்கிய முதலமைச்சர்

சிவகங்களை அரசு நிகழ்வு ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசிற்கு, காந்தி என்றாலும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என்று சாடியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், அதற்கான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

காரைக்குடி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செட்டிநாடு பகுதியல் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, திருச்சி பைபாஸ் சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 2 ஆயிரத்து 559 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 49 திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும், அரசு சார்பில் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு 205 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதோடு, சட்டக் கல்லூரி அருகே 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

மத்திய அரசை விளாசிய முதலமைச்சர்

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயம் கிடைத்த மண் இந்த(சிவகங்கை) மண் என்றும் தெரிவித்தார்.

பலரின் வீரத்தாலும், தியாகத்தாலும் சிவந்த மண் என்றும், ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியார் வாழ்ந்த மண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் சொல்வதோடு, வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் பாராட்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆனால், தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் தரவுகளை, பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்த முலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசிற்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என சாடினார்.

கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை காலி செய்துவிட்டு, வேறு பெயரில் புதிய திட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் என்று உறுதிபடக் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் மகிழ்ச்சியே தன்னுடை மகிழ்ச்சி என்றும், தமிழகத்தின் வளர்ச்சியே தனது மகிழ்ச்சி என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget