CM Stalin Speech: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல் என்றும் எல்லாருக்குமானதுதான் திராவிட மாடல் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல் என்றும் எல்லாருக்குமானதுதான் திராவிட மாடல் என்றும் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக முப்பெரும் விழா
விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு தலைவர்கள் பெயரில் விருதுகளை,திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
விருது
சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு, பெரியார் விருதை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
கோவை இரா.மோகனுக்கு, அண்ணா விருதை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவுக்கு, கலைஞர் விருதை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
திருநாவுக்கரசருக்கு பாவேந்தர் விருதை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
இவ்விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.
திராவிட மாடலின் அரசியல் கொள்கை
இவ்விழாவில் பேசிய திமுக முதலமைச்சர் ஸ்டாலின், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல் என்றும் எல்லாருக்குமானதுதான் திராவிட மாடல் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி, சமத்துவத்தை நிலைநாட்டுவதும் நமது கடமை, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் வலிமையான வளமான மாநிலங்களாக திகழ வேண்டும், அதுதான் திராவிட மாடலின் அரசியல் கொள்கை.
View this post on Instagram
ஒற்றைத் தன்மை கொண்டதாகவும்,ஒற்றை மொழியான இந்தியையும் திணிப்பதை ஏற்க்க முடியாது, ஜிஎஸ்டி வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. நீட், கல்விக் கொள்கை மூலமாக உரிமை மறுக்கப்பட்டு விட்டது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களாக உள்ளன.
”நாடும் நமதே நாற்பது நமதே”
ஆளுநர் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். அதை தடுக்க நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில், நமது கூட்டணி சார்பாக 40 எம்.பி-க்கள் இருக்க வேண்டும். நாடும் நமதே நாற்பது நமதே என்பதற்கு, முப்பெரும் விழா தொடக்கமாக இருக்கட்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

