மிஸ் பண்ணிடாதீங்க...! இளைஞர்களுக்கு குடிமைப் பணி பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்...
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் வெற்றிபெற பயிற்சி

கடலுார்: மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் வெற்றிபெற பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடிமைப் பணி
இந்தியக் குடிமைப் பணி அல்லது ஐ.சி.எஸ் (Indian Civil Service) பிரித்தானிய இந்தியாவை மேலாண்மைச் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886-இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக வேந்திய குடிமைப் பணி அல்லது பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி என்று அழைக்கப்பட்டது
இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான பயிற்சி
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.,
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து மேற்கொள்கிறது.
பிரத்யேக பயிற்சி
ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை கடலுார் மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர், கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.





















