சிவசங்கர் பாபா.. சுஷில் ஹரி பள்ளி : பாலியல் வன்குற்றப் புகார் நடவடிக்கைக்கு கையொப்பம் கேட்கும் சின்மயி
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வருவதற்கான மாற்றம் என்ற அமைப்பின் மனுவில் கையொப்பம் இடுங்கள் என்று சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன். அவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்தது. இந்த சம்பவம் பெற்றோர்கள் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Alumni at #SushilHariSchool have started this change(dot)org petition to bring the serious sexual harassment allegations to book.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 28, 2021
Kindly sign. https://t.co/Yadpso17tp
இந்த நிலையில், பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அவர்கள் சந்தித்த கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வருவதற்காக மாற்றம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். தயவுசெய்து அவற்றில் கையொப்பம் இடுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது பதிவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிவசங்கர் பாபாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக திகழும் சின்மயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கவிஞர் வைரமுத்துவிற்கு மலையாளத் திரையுலகின் உயரிய விருதான ஓ.என்.வி. விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த மாநில திரையுலகினர் பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்தால் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையும் சின்மயி கேலி செய்யும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் தனது டுவிட்டரில், “ வைரமுத்து, ஓ.என்.வி. கலாச்சார அகாடமியால் வழங்கப்படும் ஐந்தாவது ஓ.என்.வி. இலக்கிய விருதைப் பெறுகிறார். ஆஹா அருமை! மறைந்த ஓ.என்.வி. குருப் இதற்காக மிகவும் பெருமைப்படுவார்” என்று பதிவிட்டிருந்தார். ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மாணவிகள் தாங்கள் சந்தித்த பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.