மேலும் அறிய

CM Stalin: ''பதினைந்தே மாதங்களில்''- சர்காஸ்ட்டிக்காக பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்; என்ன அர்த்தம் தெரியுமா?

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில், இன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா காண்பதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில், இன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா காண்பதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நினைவாக ரூ.250 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.  

இந்த மருத்துவமனையில் அனைத்து மக்களும் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளன.  அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை ஏற்று,  ஜூன் மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து,  கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பார் என்று தகவல் வெளியானது. எனினும் குடியரசுத் தலைவர் முர்மு, செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதால், பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரவில்லை. 

CM Stalin: ''பதினைந்தே மாதங்களில்''- சர்காஸ்ட்டிக்காக பதிவிட்ட  முதல்வர் ஸ்டாலின்; என்ன அர்த்தம் தெரியுமா?

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) மாலை 6 மணிக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ’’அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!

We are delivering on our aims!’’ என்று தெரிவித்துள்ளார். 

முதல்வர், We are delivering on our Promises என்று பதிவிடாமல், We are delivering on our 'aims' என்று குறிப்பிட்டதன் பின்னணியில், மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் தற்போதைய நிலையை முதல்வர் மறைமுகமாகக் கிண்டல் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மதுரை எய்ம்ஸ்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை  கடந்த 2015-ல் மத்திய அரசு வெளியிட்டது. ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கரில் தோப்பூரில்  மருத்துவமனை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

CM Stalin: ''பதினைந்தே மாதங்களில்''- சர்காஸ்ட்டிக்காக பதிவிட்ட  முதல்வர் ஸ்டாலின்; என்ன அர்த்தம் தெரியுமா?

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு, 4.5 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. மருத்துவமனைக்கான சாலை வசதி, சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை  தொடங்கப்பட்டது. இந்த மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' திறப்பு விழா காண்பதாக, முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget