மேலும் அறிய

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மதியம் மூன்று மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் என் மொத்தம் 1.50 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1.34 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. 

மேட்டூர் அணை:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 71 வது முறையாக 405 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 100 அடியை எட்டி உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 1,34,115 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.69 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 75.16 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு.

நீர் திறப்பு:

இந்த நிலையில், முதல்வர் தலைமையில் நீர்வளத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை திறப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக, 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது.

இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடப்படும். தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு காவிரி நீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மதியம் மூன்று மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

முழு கொள்ளளவு எப்போது?

தொடர்ந்து, நாளை மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்.

எனவே காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. 

காவிரி ஆறு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Top 10 News Headlines: அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Top 10 News Headlines: அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Gold Silver Rate Jan.13th: இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.! புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று எவ்வளவு.?
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.! புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று எவ்வளவு.?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
Tamilnadu Roundup: முதலமைச்சர் மடல், விஜய்க்கு மீண்டும் சம்மன்?, சென்னையில் பிரதமர், மேலும் உயர்ந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் மடல், விஜய்க்கு மீண்டும் சம்மன்?, சென்னையில் பிரதமர், மேலும் உயர்ந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Embed widget